சமஸ்கிருததிலும் இதை போலவே, எண்கள் உள்ளன. நாம் இன்று பயன்படுத்தும் எண்கள், இந்தோ-அரேபிய எண்கள் என்று வழங்கப்படுகின்றன. தமிழ், சமஸ்கிருதம் இரண்டுமேயின்றி எவ்வாறு இந்தோ- என்று அழைக்கப்படுகிறது என்று தெரியவில்லை. ஒரு வேளை, சுல்தான்களும், முகலாயளர்களும் பல நூற்றாண்டுகள் வட இந்தியாவை ஆண்டதால், இந்த பெயர் வந்திருக்கலாம்.
இந்தோ-அரேபியம் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 100 | 1000 |
தமிழ் | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௰ | ௱ | ௲ | |
சமஸ்கிருதம் | ० | १ | २ | ३ | ४ | ५ | ६ | ७ | ८ | ९ |
தமிழ் எண்களும், சமஸ்கிருத எண்களும், இந்தோ-அரேபிய எண்களுடன் ஒற்றுமையுள்ளதை கவனிக்கவும். தமிழில் சுழியம் (பூஜ்யம்) பயனில் இல்லை. அதை கண்டுப்பிடித்த பெருமை, வட இந்தியர்களுக்கே.
எழுத்துக்கள் போலவே சில எண்கள் இருந்தாலும் (க-1, உ-2, ரு-5, எ-7, அ-8), இவ்வெழுத்துக்கள் யாவும் தனியே பொருள் தராது. ஆகையால் சொற்களிலின்றி தனியே சொற்களுக்கு இடையே இருக்கும்போது, அவை எண்கள் என தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, அன்பழகன் கடைக்கு சென்று அ பழங்கள், ரு ரூபாய்க்கு வாங்கி வந்தான்.
எண்களை எழுதும் முறை:
11 என்று எழுத வேண்டும் எனில், 10+1 என்று எழுத வேண்டும். அதாவது ௰க என்று எழுதினால் பதினொன்று என்று பொருள்.
225 என்று எழுத 200+20+5, அதாவது உ௱உ௰௫ என்று எழுத வேண்டும்.
௲௪௰ = 1040
௲௯௱௮௰௫ = 1985
௮௲ = 8000
௭௰௲ = 70,000
௮௱௲௲௯௱௮௰௫ = 801985
எனக்கு இந்த எண்களை எழுதவும், புரிந்து கொள்ளவும் மிகவும் கடுமையாக உள்ளது. இந்தோ-அரேபிய எண்கள் முறைக்கு சிறு வயதிலிருந்தே பழகிவிட்டதாலும், இந்த எண்களை இதற்கு முன்பு கண்டதேயில்லை என்பதாலும் இந்த கடினம் என்று நினைக்கிறேன். உபயோகிக்க தொடங்கினால் எளிதாகவிடும்.
கீழே எண்களுக்கு உரிய தமிழ் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் மட்டும்தான் மகாயுகம் (1022) வரையிலும் சொல்லுவதற்கு சொற்கள் உண்டு எங்கோ கோள்விப்பட்ட ஞாபகம். ஆனால் ஆங்கிலத்தில் Centillion (10303 ) வரையிலும் உள்ளது. ஆனால் இவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் சேர்க்கப்பட்டது என்று அறிகிறேன்.
தமிழ் எண் | தமிழ் சொல் | ஆங்கில சொல் | |
1 | க | ஒன்று | One |
10 | ௰ | பத்து | Ten |
100 (102) | ௱ | நூறு | Hundred |
1000 (103) | ௲ | ஆயிரம் | Thousand |
10000 (104) | ௰௲ | பத்தாயிரம் | Ten thousand |
100000 (105) | ௱௲ | நூறாயிரம் | Hundred thousand |
1000000 (106) | ௲௲ | பத்துநூறாயிரம் | Million |
10000000 (107) | ௰௲௲ | கோடி | Ten million |
100000000 (108) | ௱௲௲ | அற்புதம் | Hundred million |
1000000000 (109) | ௲௲௲ | நிகற்புதம் | Billion |
10000000000 (1010) | ௰௲௲௲ | கும்பம் | Ten billion |
100000000000 (1011) | ௱௲௲௲ | கனம் | Hundred billion |
1000000000000 (1012) | ௲௲௲௲ | கர்பம் | Trillion |
10000000000000 (1013) | ௰௲௲௲௲ | நிகர்ப்பம் | Ten trillion |
100000000000000 (1014) | ௱௲௲௲௲ | பதுமம் | Hundred trillion |
1000000000000000 (1015) | ௲௲௲௲௲ | சங்கம் | Quadrillion |
10000000000000000 (1016) | ௰௲௲௲௲௲ | வெல்லம் | Ten quadrillion |
100000000000000000 (1017) | ௱௲௲௲௲௲ | அன்னியம் | Hundred quadrillion |
100000000000000000 (1018) | ௲௲௲௲௲௲ | அர்த்தம் | Quintillion |
1000000000000000000 (1019) | ௰௲௲௲௲௲௲ | பர்ரர்த்தம் | Ten quintillion |
100000000000000000000 (1020) | ௱௲௲௲௲௲௲ | பூரியம் | Hundred quintillion |
1000000000000000000000 (1021) | ௲௲௲௲௲௲௲ | முக்கோடி | Sextillion |
10000000000000000000000 (1022) | ௰௲௲௲௲௲௲௲ | மகாயுகம் | Ten sextillion |
1989 இந்திய வாகன சட்டப்படி, மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம். ஆனால் இதுவரை யாரும் வானக எண் பலகையில் தமிழ் எண்கள் உபயோகித்து நான் பார்த்தது இல்லை. தமிழ் உணர்வாளர்கள் சிலர், இந்த எண்களை நாம் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று வாதிடுகிறார்கள். இது உண்மையில் முடியாத காரியமாய் எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் கணிதத்திலும், காசு, பணத்திலும் இதை பயன்படுத்துவது இயலாது. ஏனினும், பள்ளிகளில் சிறு வயதிலேயே, இந்த எண்கள் முறை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். மேலும் தமிழ் புத்தங்களில், இந்த எண்கள் முறையை உபயோகிக்க வேண்டும்.
super! :-)
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்தொ அரேபிய எண்கள் என்ற பெயர் சிந்து சமவெளி நாகரிகத்தில் உருவாகி அங்கு வியாபார நிமித்தம் வந்த அரேபியர்களால் பரப்பப்பட்டதால் என்று அறிகிறேன்.
பதிலளிநீக்குஇந்தோ அரேபிய எண்கள் தமிழரின் கண்டுபிடிப்பு என்று கருத்திடுபவர்களும் உண்டு... அவ்வாறெனில் ஏன் தனியாக தமிழிலும் எண்கள் இருக்கின்றன என்று தான் புரியவில்லை.
தமிழ் எண்களை என் குறிப்பிடவில்லை
பதிலளிநீக்குதமிழ் எண்களை என் குறிப்பிடவில்லை
பதிலளிநீக்கு