வியாழன், 22 ஜூலை, 2010

மதராஸபட்டினத்தில் ஒர் வரலாறு தவறு


மதராஸ பட்டினம் திரைப்படம், இது ஒரு வரலாறு திரைப்படம், சுதந்திரத்துக்கு முந்தைய சென்னையை நம் கண் நிறுத்துகிறது என்று எல்லாரும் பாராட்டினார்கள். சமீப காலமாக வரலாற்றில் அதிக ஈடுபாடு ஏற்பட்டு உள்ளதால் உடனடியாக படத்தை பார்த்தேன். படம் பெரிதாக வரலாற்றை சொல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் தவறாக ஒர் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வழக்கமான தமிழ் திரைப்படம்தான், பணக்கார வீட்டு பொன்னு, ஏழை வீட்டு கதாநாயகனை காதலிக்கிறார். இரண்டு வித்தியாசங்கள்: 1. காலம் 1947, 2. பொன்னு பிரிட்டிஷ் கவர்னர் பொன்னு, பையன் நம்ப ஊரு சலவை தொழிலாளி.

சரி, சரி நான் பொதுவான திரைவிமர்சனம் போல் போகிறேன். என்ன தவறு என்று அதை சொல்கிறேன். படத்தின் முடிவில் ஆகஸ்ட 14 நள்ளிரவில் (அதாவது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க சில நிமிடங்களுக்கு முன்பு) காதலனும், காதலியும் சென்னை மத்திய ரயில்வே நிலையத்தில் ஒளிந்து கொள்கிறார்கள். அப்போது அங்கு கூடும் காங்கிராசார், அவர்களுக்குள் பேசி கொள்கின்றனர். ஒருவர், ”காமராசர் இதுலதானே வராரு ”(இது என்பது ரயில் வண்டி) என்று கேட்கிறார். அதற்கு அடுத்தவர், “காமராசர் இதுல வரல. சத்தியமூர்த்தியும் ஆச்சாரியாரும் வராங்க” என்கிறார். பிறகு “ஆச்சாரியார் வாழ்க”, சத்தியமூர்த்தி வாழ்க” என்று முழக்கங்கள் போடுகிறார்கள்.

தவறுகள்:

1. சத்தியமூர்த்தி அய்யர் 1943ஆம் வருடமே இறந்துவிட்டார். அவர் எப்படி 1947ல் வர முடியும் என்று தெரியவில்லை.

2. ஆச்சாரியார் என்று அழைக்கப்படும் இராஜாஜி அவர்கள், காங்கிரஸில் காந்தி, நேருவுக்கு பிறகு அன்று மூன்றாமிடத்தில் இருந்து முக்கிய பங்காற்றியவர். மேலும் சுகந்திரத்தன்றே, இராஜாஜி மேற்கு வங்கத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். ஆகவே சுகந்திர பிரகடனத்தின்போது அவர் டெல்லியில்தான் இருந்திருப்பார். நள்ளிரவில் அவர் சென்னை வர வாய்ப்பே இல்லை.

3. காமராசரும் சுகந்திரத்தின்போது, டெல்லி சென்றதாக தெரியவில்லை. அவர் தமிழகத்திலேதான் இருந்திருப்பார். டெல்லி போகாதவர், திரும்பி வருகிறாரா...

இம்மூன்றில் இராஜாஜி, காமராசர் குறித்தவை, வரலாறு குறிப்பிகளின் படி எனது கணிப்பு மட்டுமே. சற்சமயம் என்னிடம் ஆவணங்கள் இல்லை. ஆனால் சத்தியமூர்த்தி குறித்தது முற்றிலும் உண்மை.

இன்னோரு வியப்பு, ஆனந்த விகடன் உட்பட பலரின் திரை விமர்சனத்திலும், இந்த தவறு சுட்டிக்காட்டப்படவில்லை. அந்த அளவுக்கு தமிழர்களுக்கு, தமிழனின் அரை நூற்றாண்டு வரலாறே மறந்துவிட்டதா???

சிலப்பதிக்காரம், சீவக சிந்தாமணியாவும் சாதாரண கதை புத்தங்கள்தான். ஆனால் அந்த கதைகள் மூலம், பழந்தமிழரின் கலாச்சாரம், வாழ்கைமுறை ஆகியவை குறித்து அறிகிறோம். அதுபோல் திரைப்படங்களும் வரலாறு ஆவணங்கள்தான். எனவே தயவு கூர்ந்து இது மாதிரியான சிறு சிறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும்.

4 கருத்துகள்: