சனி, 24 ஜூலை, 2010

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? How to type in Tamil?


முதலாவதாக தமிழில் தட்டச்சு செய்ய, நீங்கள் தமிழ் தட்டச்சு பயில வேண்டும் என்று தேவையில்லை. சாதரணமாக நாம் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது போல், தட்டச்சு செய்தாலே தமிழில் வந்துவிடு. இப்போதைக்கு லினக்ஸ் (Linux) மற்றும் மேக்கில் (Mac) இந்த மென்பொருள் வேலை செய்யாது.
1.   முதலில் http://software.nhm.in/products/writer என்னும் வலைதளத்திற்கு செல்லவும்.
2.   பிறகு அங்கு NHM Writer என்னும் மென்பொருளை (software), download என்னும் இடத்தில் சுட்டுவது (Clicking) மூலம் பதிவிறக்கம் (Download) செய்து உங்கள் கணிணியில் சேமிக்கவும்.
3.   அடுத்து சேமித்த NHM Writer மென்பொருளை, கணிணியில் நிறுவவும் (Install). நிறுவுதலின் போது, மொழியை தேர்வு செய்வதற்கான வசதி உண்டு. அப்போது தமிழ் (Tamil) என்று தேர்வு செய்யவும் (பிற இந்திய மொழிகளையும் தேர்வு செய்து, இந்த மென்பொருள் மூலம் தட்டச்சு செய்யலாம்).
4.   நிறுவுதலின் போது, quick launch icon (இது கணிணி முகப்பின் வலப்பக்கம் நேரத்திற்கு அருகிலுள்ள சின்னங்களை குறிக்கும்) வசதியை வேண்டுமென்று சரி குறி (Tick) செய்வதை நான் வலியுறுத்துகிறேன்.
5.   மென்பொருள் நிறுவுதல் முடிந்த பிறகு கீழே வலப்பக்கமுள்ள சின்னங்களில் (Quick launch icon) புதிதாக மணி போன்ற ஒர் சின்னம் முளைத்திருக்கும்.  அந்த மணியின் மீது சுட்டினால, கீழ்கண்டவாறு காண்பிக்கும்.
Alt + 0 Keymap off
Alt + 1 Tamil Tamil99 Unicode
Alt + 2 Tamil Phonetic Unicode
Alt + 3 Tamil Oldtypewriter Unicode
Alt + 4 Tamil Bamini Unicode
Alt + 5 Tamil Inscript Unicode
6.   அவற்றுள் ‘Phonetic’ என்பதுதான், எளிதானதும், தமிழ் தட்டச்சு பழக்கம் தேவையற்றதும் ஆகும். இப்போது Alt + 2 என்று அழுத்தினால், தமிழில் தட்டச்சு செய்யலாம். ஆங்கிலத்திற்கு மாறுவதற்கு Alt + 0 அல்லது Alt + 2வையே மீண்டும் அமுக்கவும். தமிழில் உள்ள போது, மணி தங்க நிறத்தில் இருக்கும். ஆங்கிலத்திற்கு மாறிய பிறகு இயல்பாக மாறிவிடும். ஆகவே மணியின் நிறத்தை கவனிப்பதன் மூலம், எந்த மொழியில் உள்ளது என்று அறியலாம்.
7.   ‘Phonetic’ என்பது நாம் உச்சரிப்பதை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வந்துவிடும். எடுத்துகாட்டாக `முருகன்’ என்று தட்டச்சு செய்ய, நாம் ஆங்கிலத்தில் எழுதுவது போல் `murugan’ என்று தட்டச்சு செய்தால் தமிழில் வந்துவிடும்.
8.   ஆயினும் சில எழுத்துக்களை அப்படியே நாம் உச்சரிப்பதை போல், தட்டச்சு செய்தால் வராது. உதாரணமாக, `ந்` என்று தட்டச்சு செய்ய வேண்டுமெனில், ‘n’ எழுத்தை அமுக்கினால் வராது, அதற்கு இரட்டை சுழி `ன்`தான் வரும். `ந்` எழுத்துக்கு `w’ஐ அமுக்க வேண்டும். இது போன்று சில விதிவிலக்குகள் உள்ளன. ஆகவே, கீழே ஒவ்வொரு எழுத்துக்கும் எந்த ஆங்கில எழுத்தை அமுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர் எழுத்துக்கள் (ஒள எழுத்து மட்டும் கடைசியாக பார்ப்போம்):
a
aa/ *a
i
ii/ *i
u
uu/ *u
e
ee/ *e
ai
o
oo/ *o

நெடில் எழுத்துக்களுக்கு, இரு முறை குறில் எழுத்திற்கான ஆங்கில எழுத்தை அமுக்கவும் அல்லது shiftஐ அமுக்கி அமுக்கவும் (/ என்பது அல்லது என்பதையும், * என்பது shiftஐயும் குறிக்கின்றன). இப்போது ‘அ’ என்று தட்டச்சு செய்ய வேண்டுமென்றால் ‘a’ எழுத்தை அழுத்தவும். அதுவே ‘ஆ’ என்று தட்டச்சு செய்ய, ‘a’ எழுத்தை அடுத்தடுத்து இரண்டு முறையோ, அல்லது shiftஐ அமுக்கியோ ‘a’ எழுத்தை அழுத்தவும்.
ஆய்த எழுத்து:
q

மெய் எழுத்துக்கள்:
க்
ங்
ச்
ஞ்
ட்
ண்
த்
ந்
ப்
ம்
ய்
ர்
ல்
வ்
ழ்
ள்
ற்
ன்
k/g
ng
s/c
gn
t/d
*n
th
w
p/b
m
y
r
l
v
z
*l
*r
n

’க்’ போன்ற சில மெய் எழுத்துக்களுக்கு இரண்டு ஆங்கில குறிகள் உள்ளன. எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்.  முன்பு குறிப்பிடதை போலவே, * shiftஐ குறிக்கும். ‘n’ என்று அமுக்கினால் இரட்டை சுழி ‘ன்’ வரும், அதுவே shift அமுக்கி ‘n’ அமுக்கினால் மூன்று சுழி ‘ண்’ வரும்.

வட மொழி எழுத்துக்கள்:
ஹ்
ஜ்
ஸ்
ஷ்
க்ஷ்
ஸ்ரீ
h
j
*s
sh
x
sri

பிற எழுத்துக்கள்:
ஃப்
f


உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிரெழுத்தும், மெயெழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குவது நாம் அனைவரும் அறிந்ததே.
ம்+எ = மெ
எனவே `மெ` என்று தட்டச்சு செய்ய வேண்டுமெனில் m(ம்) மற்றும் e(எ) ஆகிய எழுத்துக்களை அடுத்தடுத்து அமுக்கினால் ‘மெ’ என்று வந்துவிடும்.
ஒர் குறை – ஒள:
இந்த மென்பொருளின், ஒரே குறை `ஒள` மற்றும் அதனை சார்ந்த உயிரெழுத்துக்களை ஒசையின் படி தட்டச்சு செய்ய இயலாது. `ஒள` என்று தட்டச்சு செய்ய, அதை இரண்டு எழுத்தாக பாவித்து `ஒ+ள` தட்டச்சு செய்ய வேண்டும். அதே போல் ‘கெள` போன்ற உயிரெழுத்துக்கும், `கெ+ள` என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
இங்கு நான் விரிவாகவும், தெளிவாகவும் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்று கூறியுள்ளேன் என்று நம்புகிறேன். மேலே கூறியுள்ளவை மிகவும் குழப்பமானதும், கடினமானதும் போல் தோன்றலாம், ஆனால் தட்டச்சு செய்ய ஆரம்பித்தால் பழகிவிடும். இப்போதெல்லாம் நான், ஆங்கிலத்திற்கு இணையான வேகத்தில் தமிழிலும் தட்டச்சு செய்கிறேன் என்பதை பெருமையுடன் கூறி கொள்கிறேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக